
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது.ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் 6 பந்துகளை எதிர்கொண்ட அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி தஸ்கின் அஹ்மதின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த கேப்டன் ஷான் மசூத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 57 ரன்களில் ஷான் மசூத்தும், 58 ரன்களில் சைம் அயூப்பும் என அடுத்தது மெஹிதி ஹசன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி தரப்போது வரை முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பாபர் அசாம் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
* WICKET:* Pakistan 0/1 (1 ov, lost the toss) v Bangladesh
— (@ikview) August 31, 2024
Abdullah Shafique b Taskin Ahmed 0 (6)
Taskin Ahmed 1-1-0-1 #PAKVSBAN #cricketnews pic.twitter.com/Rd2jE8yxAU