தோனிக்கே டஃப் கொடுக்கும் வீரரை தேர்வு செய்யவுள்ள லக்னோ!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வங்கதேசத்தின் டஸ்கின் அகமதுவை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள சூழலில் பல அணிகளிலும் வீரர்கள் வெளியேறி வருகின்றனர். குஜராத் அணியில் இருந்து ஜேசன் ராய், மும்பை அணியில் இருந்த் ஜோஃப்ரா ஆர்ச்சர் என அடுத்தடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினர்.
இதில் லக்னோ அணியின் நம்பிக்கை வீரராக இருந்த மார்க் வுட்-ம் வெளியேறுவதாக அறிவித்தார். வலதுகை முட்டுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் மார்க் வுட் அவதிப்பட்டு வருவதாகவும், குணமடைய சில காலம் ஆகும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. அவரை நம்பி ரூ. 7.5 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. எனவே உடனடியாக அதே தொகைக்கு தகுதியுடைய ஒரு பவுலரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
Trending
இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் புதிய முடிவை எடுத்துள்ளார். அதாவது வுட்டிற்கு பதிலாக வங்கதேசத்தை சேர்ந்த டஸ்கின் அகமது-ஐ ஒப்பந்தம் செய்யவுள்ளனர். இதற்காக டஸ்கினுடம் பேச்சுவார்த்தைகளும் முடிந்துவிட்டன. வங்கதேச வாரியம் மற்றும் வீரரின் முடிவுக்காக மட்டுமே தற்போது லக்னோ அணி காத்துள்ளது.
வங்கதேச அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகள், மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டஸ்கின் பங்கேற்றுள்ளார். இதனால் அந்த தொடரில் இருந்து பாதியில் வெளியேறிவிட்டு தான் டஸ்கின் வர வேண்டும். ஏற்கனவே தென்னாப்பிரிக்க வீரர்கள் பாதியில் ஐபிஎல் தொடருக்கு வருவதால், டஸ்கினுக்கும் எவ்வித பிரச்சினையும் இருக்காது எனத்தெரிகிறது.
டஸ்கின் அகமது இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் தொடரில் விளையாடியதில்லை. ஆனால் சர்வதேச தொடரில் கலக்கி வருகிறார். குறிப்பாக தோனி உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் இவரது பவுலிங்கில் சிரமப்பட்டுள்ளனர். இதனால் தொடக்கத்திலேயே ரூ.7.5 கோடி என்பது சரியான ஊதியம் தான் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now