இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் விளையாடும் லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வங்கதேசத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் இருதரப்பு தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்தவகையில் தற்போது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான தொடர்களிலும் விளையாடவுள்ளது.
அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான ஜூன் 16ஆம் தேதி தொடங்கி ஜூலை 09ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதிலும் குறிப்பாக இரு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Trending
இந்நிலையில் இத்தொடருக்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வடிவிலான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் நட்சத்திர வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், பூஜா வஸ்திரேகர் ஆகியோர் மூன்று வடிவிலான அணியிலும் இடம்பிடித்துள்ள நிலையிலும், அவர்களின் உடற்தகுதியைப் பொறுத்தே வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்க மகளிர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. லாரா வோல்வார்ட் தலைமையிலான இந்த அணியில் தஸ்மின் பிரிட்ஸ், மரிஸான் கேப், சுனே லூஸ், நதின் டி கிளார்க், டெல்மி டக்கர் ஆகியோர் இரு அணிகளும் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் அயபோங்கா காகா ஒருநாள் அணியில் மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க மகளிர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி: லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், தஸ்மின் பிரிட்ஸ், நாதின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர், சினாலோ ஜாஃப்டா, மரிஸான் கேப், அயபோங்கா காக்கா (ஒருநாள் அணி மட்டும்), மசபடா கிளாஸ், சுனே லூஸ், எலிஸ்-மாரி மார்க்ஸ், நோன்குலுலேகோ ம்லாபா, துமி செகுகுனே, நோண்டுமிசோ ஷங்கசே, டெல்மி டக்கர்.
Win Big, Make Your Cricket Tales Now