
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முல்தான் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வீரேந்திர சேவாக் 309 ரன்களை குவித்ததற்காக இன்றும் நினைவுகூறப்படுகிறது. இந்தப் போட்டியில்தான் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதே ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 194 ரன்கள் எடுத்தார். இருப்பினும் அவர் தனது இரட்டை சதத்தை எட்டுவதற்கு 6 ரன்கள் இருந்தபோது, கேப்டன் ராகுல் டிராவிட் இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய முடிவு செய்தார். இதனால் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் குழப்பமடைந்தனர்.
இந்திய அணியின் ஸ்கோர் 675/5 என்ற நிலையில் இன்னிங்சை டிக்ளேர் செய்ய ராகுல் டிராவிட் முடிவு செய்திருந்தார். யுவராஜ் சிங் 59 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் உடனடியாக “டிக்ளேர்” அறிவிப்பு வந்தது. முல்தான் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இது பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணி வென்ற முதல் டெஸ்ட் தொடர் இது.