
Team India Are The Most Probable Favorites To Win The World Cup, Says Brett Lee (Image Source: Google)
டி20 உலக கோப்பை தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் தகுதி போட்டிகள் முடிகின்றன. நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. இதில் வரும் 24ஆம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த உலக கோப்பையை இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளில் ஒன்று வெல்லும் என்று அதிகமானோர் மதிப்பிட்டுள்ளனர். விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ள இந்திய அணி, அதிரடியான பேட்டிங், உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சு என நல்ல வலுவான மற்றும் பேலன்ஸான அணியாக திகழ்கிறது.
இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்களையும் இந்திய பேட்ஸ்மேன் தான் அடிப்பார் என்றும், அதிக விக்கெட்டுகளை இந்திய பவுலர் தான் வீழ்த்துவார் என்றும் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.