Advertisement
Advertisement

SL vs IND: இலங்கை சென்றடைந்த இந்திய டி20 அணி; வைரலாகும் காணொளி!

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்றைய தினம் தனி விமானம் மூலம் இலங்கை சென்றடைந்த காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan July 22, 2024 • 23:37 PM
SL vs IND: இலங்கை சென்றடைந்த இந்திய டி20 அணி; வைரலாகும் காணொளி!
SL vs IND: இலங்கை சென்றடைந்த இந்திய டி20 அணி; வைரலாகும் காணொளி! (Image Source: Google)

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுடன், இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு சலசலப்புகளையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ருதுராஜ்க் கெய்க்வாட், அபிஷேக் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்காதது, சஞ்சு சாம்சனை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. 

மேற்கொண்டு அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை ஒதுக்கி சூர்யகுமார் யாதவிற்கு டி20 அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சமீபகாலங்களில் சோபிக்க தவறி வரும் ஷுப்மன் கில்லிற்கு அணியின் துணைக்கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒருநாள் தொடரில் ஓய்வு கேட்டிருந்த ரோஹித் சர்மா, விரட் கோலி ஆகியோரும் தங்கள் முடிவை கைவிட்டுள்ளனர்.

Trending


அத்துடன் இந்த தொடர் முதல் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீர்ர் கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனால் எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான தொடர் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியானது இன்றைய தினம் இலங்கை சென்றடைந்தது. 

 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement