Advertisement

கேப்டனாக எனது நூறு சதவீதத்தைக் கொடுத்தேன் - ரிஷப் பந்த்!

India vs South Africa: கேப்டனாக, வீரராக நூறு சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணத்தில் இருந்தது என இந்திய அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 20, 2022 • 11:43 AM
Team India Going In The Right Way, Feels Captain Rishabh Pant
Team India Going In The Right Way, Feels Captain Rishabh Pant (Image Source: Google)
Advertisement

இந்தியா வந்த தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் முழு ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்க அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்தது. 

இதனால், தொடர் 2-2 என சமநிலை அடைந்ததால், பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறவிருந்த கடைசிப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், மழை குறுக்கீடு காரணமாக கடைசிப் போட்டி நடைபெறவில்லை.

Trending


ரிசர்வ் டேவும் இல்லாததால், இத்தொடர் 2-2 என சமன் அடைந்துவிட்டதாக நடுவர்கள் அறிவித்தார்கள். கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.

இத்தொடரில் அதிக எதிர்பார்ப்புகள் தினேஷ் கார்த்திக் மீதுதான் இருந்தது. இத்தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றால், ஓரம்கட்டப்படுவார் என்பதால், அவருக்கு இது முக்கியமான தொடராகத்தான் இருந்தது. முதல் போட்டியில் இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், அடுத்த போட்டியில் நெருக்கடியான நிலையில் களமிறங்கிய 30 ரன்களை குவித்து அசத்தினார்.

அடுத்து மூன்றாவது போட்டியில் தவறான ஷாட்டை ஆடிய தினேஷ் கார்த்திக், நான்காவது போட்டியில் 26 பந்துகளில் அரை சதம் கடந்து, மேட்ச் வின்னராக இருந்தார்.

ஆனால், ரிஷப் பந்த் அப்படி கிடையாது. தொடர்ந்து ஆஃப் திசையில்தான் அவுட் ஆனார். ஒருகாலத்தில் ஸ்பின்னர்கள், இவரை கண்டாலே நடுவார்கள். ஆனால், தற்போது ரிஷப் பந்தை அவர்கள்தான் நடுவங்க வைத்து வருகிறார்கள். ரன்களை குவிக்க திணறி வருகிறார். 

மேலும், இக்கட்டான நிலையிலும், தன்போக்கில் தவறான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்துவிடுகிறார். போட்டியின் சூழ்நிலைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் இவரால் விளையாட முடியவில்லை.

இந்நிலையில் ஐந்தாவது போட்டி கைவிடப்பட்ட பிறகு பேசிய ரிஷப் பந்த், தன்னுடைய தவறு குறித்துப் பேசியுள்ளார். 

அதில், ‘‘0-2 என்ற நிலையில் இருந்து, அதிரடியாக மீண்டு வந்தோம். கேப்டனாக, வீரராக 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணத்தில் இருந்தது. முதல்முறையாக தொடர்ந்து பலமுறை டாஸை இழந்திருக்கிறேன். 

அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளேன். இதில், சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தனிப்பட்ட முறையில், நான் இன்னமும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement