IND vs ENG : இந்திய பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க போவது யார்?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பது குறித்து பார்ப்போம்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, இந்த முறை டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
Trending
ரோஹித் சர்மா மற்றும் மயான்க் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3ஆம் வரிசையில் புஜாரா, 4ஆம் வரிசையில் கோலி, 5ஆம் வரிசையில் ரஹானே என்பது அணியின் நிரந்தர பேட்டிங் ஆர்டர்.
6ஆம் வரிசையில் கேஎல் ராகுலும், 7ஆம் வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் பேட்டிங் ஆடுவார்கள் என கருதப்படுகிறது. இதனால் இப்போட்டியின் ஸ்பின்னராக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மட்டுமே இடம்பெறுவர். மேலும் இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகம் என்பதால் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் பேட்டிங் வலிமையை அதிகரிக்கும் பட்சத்தில் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் இருவரும் அணியில் இடம்பிடிக்கும் பட்சத்தில் ரவிசந்திரன் அஸ்வினுக்கு அணியில் இடம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தேச இந்திய அணி
ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.
Win Big, Make Your Cricket Tales Now