
Team India starts practice without Hardik Pandya for 1st T20I against SA (Image Source: Google)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகளில் மோதவுள்ளது. இந்த போட்டிகள் டெல்லியில் வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 19ஆம் தேதி முடிவுடைகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து வீரர்களும் நேற்று டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு நேற்று முதல் பயிற்சி முகாம் தொடங்கியது. 2 மாத ஐபிஎல் உலகத்தில் இருந்த வீரர்கள், நேற்று தீவிர வலைப்பயிற்சி மூலம் சர்வதேச தரத்திற்கு மாறினர். உம்ரான், அர்ஷ்தீப் போன்றோர் படு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று நடந்த பயிற்சி முகாமில் ஹர்திக் பாண்டியா பங்கேற்கவில்லை. கேப்டன் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் என அனைத்து முன்னணி வீரர்களுமே வந்தபோதும் ஹர்திக் பாண்டியா வரவில்லை.