
COVID-19: Team India support staff Dayananda tests positive, Saha to isolate as close contact (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக கவுண்டி லெவன் அணியுடன் வரும் ஜூலை 20ஆம் தேதி இந்திய அணி மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில் அதிரடி வீரர் ரிஷப் பந்த்திற்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது ஹோட்டல் அறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.