வங்கதேசத்துடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்திய அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி அட்டவணையானது இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Also Read
அதனைத்தொடர்ந்து வங்கதேசம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இதில் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளும் மிர்பூரில் நடைபெற இருக்கும் நிலையில், கடைசி ஒருநாள் மற்றும் முதல் டி20 போட்டிகள் சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து கடைசி இரண்டு டி20 போட்டிகள் மீண்டும் மிர்பூரில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டி20 உலக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இத்தொடரை விளையாட இருக்கிறது. மேற்கொண்டு சாம்பியன் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி எதிர்கொள்ள முதல் வெள்ளை பந்து தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் உள்ளது. ஏனெனில் இத்தொடரின் மூலம் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள் இந்திய அணிக்கு விளையாட வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேசம் - இந்தியா தொடர் அட்டவணை
- முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 17, மிர்பூர்
- இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 20, மிர்பூர்
- மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 23, சட்டோகிராம்
- முதல் டி20 போட்டி - ஆகஸ்ட் 26, சட்டோகிராம்
- இரண்டாவது டி20 போட்டி - ஆகஸ்ட் 29, மிர்பூர்
- மூன்றாவது டி20 போட்டி - ஆகஸ்ட் 31, மிர்பூர்
Win Big, Make Your Cricket Tales Now