SA vs IND: கரோனா அச்சுறுத்தலால் தொடர் ஒத்திவைக்கப்படுகிறதா?
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டி கொண்ட தொடரில் வரும் 17ஆம் தேதி முதல் பங்கேற்கிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டி கொண்ட தொடரில் வரும் 17ஆம் தேதி முதல் பங்கேற்கிறது.
இதற்காக வரும் 8ஆம் தேதியே இந்திய அணி, மும்பையிலிருந்து தென்ஆப்பிரிக்கா செல்ல உள்ளது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஓம்மைக்கரான் வகை கரோனா வைரஸ், உலகையே மீண்டும் அச்சுறுத்தி வருகிறது
Trending
இதற்காக பல ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்காவுடனான விமான சேவையை நிறுத்தியுள்ளன. தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று திரும்பும் பயணிகளுக்கு கடும் விதி நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நெதர்லாந்து அணி தொடரை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊர் திரும்பியது.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா தொடரை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், ஏற்கனவே கரோனா அச்சுறுத்தலால் தங்களது நிதி நிலைமை மோசம் அடைந்துள்ளதாகவும், இந்தியா தொடர் மூலம் தான் வருமானம் ஈட்ட முடியும் என்பதால் முடிவை பரிசீலினை செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டது.
இந்திய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடுமையான பயோ பபுள் முறை மற்றும் விமானத்தில் செல்லாமல் தரை வழியிலேயே மற்ற மைதானங்களுக்கு செல்ல ஏற்பாடுகளை செய்வதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ, 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கு பதிலாக 2 டெஸ்ட் போட்டிகளை மட்டும் விளையாடலாம் என யோசனை தெரிவித்துள்ளது.
எனினும் ஒம்மைக்கரான் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளதால் இந்திய வீரர்கள் சிலர் தென் ஆப்பிரிக்கா செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் , இந்த தொடர் குறித்து வரும் 48 மணி நேரத்தில் பிசிசிஐ முடிவு எடுக்க உள்ளது
Win Big, Make Your Cricket Tales Now