
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனானது பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதன்படி இந்த் சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு அணியும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.
மேற்கொண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்னதாக, இத்தொடரில் பங்கேற்று விளையாடவுள்ள 8 அணிகளும் இருதரப்பு தொடர்களில் விளையாடி தங்களை தயார் செய்து வருகின்றன. அதேசமயம் இந்திய அணியோ சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு பதிலாக 2026ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இப்போதிலிருந்தே தயாராகி வருகிறது போல.
ஏனெனில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி மூன்றே மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. அதிலும் அத்தொடரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் நடைபெற இருக்கிறது. ஆனால் இதற்கு அப்படியே நேரெடிராக 12 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதேசமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக என 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.