
Temba Bavuma hails Heinrich Klaasen 'value' after South Africa's win (Image Source: Google)
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதில் கட்டாகில் நடைப்பெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்தியா 148 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 18.2 ஓவர்களில் 149 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.
கிளாசென் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகளுடன் 81 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.