
Temba Bavuma has joined up with the Sunrisers Eastern Cape for the rest of the SA20! (Image Source: Google)
ஐபிஎல் தொடரைப் போன்றே தென் ஆப்பிரிக்காவில் புதிதாக டி20 லீக் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இத்தொடரின் முதலாவது சீசன் நடைபெற்றுவரும் நிலையில், இத்தொடருக்கான வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற எஸ்ஏ20 ஏலத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. தென் ஆப்பிரிக்க வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாக இருந்தும் ஏலத்தில் யாரும் தன்னை தேர்ந்தடுக்காததால், தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
இந்நிலையில் தான் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரில் ஒரு சதம் உள்பட 180 ரன்கள் எடுத்தார். 23 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் - 114.64. மேலும் ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.