
TEX vs LAS, Match 15 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியாலின் மூன்றாம் உள்ளது. அதேசமயம் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் மூன்று தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 5ஆம் இடத்தில் உள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
TEX vs LAS: Match Details
- மோதும் அணிகள்- டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்
- இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
- நேரம் - ஜூன் 25, காலை 5.30 மணி (இந்திய நேரப்படி)
TEX vs LAS: Live Streaming Details
எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.
TEX vs LAS: Head-to-Head
- Total Matches: 3
- Texas Super Kings: 2
- Los Angeles Knight Riders: 1
- No Result: 0