
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
TEX vs SEA, Match 7 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டியானது கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளது. மறுபக்கம் சியாட்டில் ஆர்காஸ் அணி தங்களுடைய முதல் வெற்றிக்கான தேடலில் உள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.