
பெர்த் நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. வில்லியம்ஸ் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். முகமது வாசிம் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
இலக்கை விரட்டியபோது தடுமாறிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசிப் பந்தில் வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்டபோது ஒரு ரன் மட்டும் எடுத்து ரன் அவுட் ஆனார் ஷாஹீன் அப்ரிடி. சிகந்தர் ராஸா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாட பாண்டிங் எந்தளவுக்கு ஊக்கப்படுத்தினார் என்பது பற்றி சிகந்தர் ராஸா கூறுகையில், “இன்று காலை ரிக்கி பாண்டிங் பேசிய சிறிய காணொளி எனக்குக் கிடைத்தது. அதைப் பார்த்து நான் மிகவும் ஊக்கம் அடைந்தேன். இந்த ஆட்டத்தில் நன்கு விளையாட ஆர்வமாக இருந்தேன். ஊக்கம் எப்போதும் இருக்கும். ஆனால் சிறு உந்துதல் தேவை.