சாம்பியன்ஸ் கோப்பை 2025: இறுதிப்போட்டிக்கான மைதானம் மாற்றம்?
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் பட்சத்தில், அப்போட்டியானது துபாயில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், இரு அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன.
Trending
இதனால் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி இந்த ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த விரும்பும் என்ற எதிர்பார்க்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ஆனால் பிசிசிஐ இந்திய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் படி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதன்படி, எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாகவும், ஒருவேளை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் தொடரின் அப்போட்டியானது துபாயில் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
The 2025 Champions Trophy final will take place in Dubai if India qualifies; if not, Lahore will be the host. pic.twitter.com/tPNKezzp15
— CRICKETNMORE (@cricketnmore) October 8, 2024
Also Read: Funding To Save Test Cricket
ஒருவேளை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறாத பட்சத்தில் அப்போட்டியானது முன்பு குறிப்பிட்டிருந்தது போல் லாகூரில் நடத்தப்படும் என்றும் அத்தகவல் தெரிவிக்கிறது. இருப்பினும் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஐசிசி அல்லது பிசிசிஐ தரப்பில் வெளியிடவில்லை. ஆனால் இந்திய அணி நிச்சயம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்லாது என்பது மட்டும் இதன்மூலம் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now