
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் வார்னர் - கவாஜா இணை தொடக்கம் கொடுத்தது.
இதில் தொடக்க வீரர் கவாஜா 3 ரன்களில் எடுத்திருந்த போது பிராட் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் இங்கிலாந்து அணியின் பிராட் 599 ரன்களை விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 600வது விக்கெட்டை ஒன்றே பிராட் வீழ்த்தி சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.
இதையடுத்து பிராட் வீசிய ஒவ்வொரு பந்தையும் இங்கிலாந்து ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டுக்கு பவுன்சர் பந்தை பிராட் வீச, அதனை பவுண்டரி அடிக்க முயன்று ஜோ ரூட்டிடம் கேட்சானார். இதன் மூலம் இங்கிலாந்து அணி ஸ்டூவர்ட் பிராட் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.