அஷஸ் டெஸ்ட்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு நூறு விழுக்காடு பார்வையாளர்களும் அனுமதிக்கப்படுவர் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரானது அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Trending
இந்நிலையில் இப்போட்டிக்கு நூறு விழுக்காடு பார்வையாளர்களும் அனுமதிக்கப்படுவர் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது. கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா வகுத்துள்ளது.
அதன்படி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவரும் மைதானத்தில் அனுமதிக்கப்படவுள்ளனர். இதன் மூலம் கிட்டத்திட்ட ஒரு லட்சம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: T20 World Cup 2021
முன்னதாக கடந்தாண்டு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் நாளொன்றுக்கு 30ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now