Advertisement

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய வங்கதேசம்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் மிகக்குறைந்த ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பிறகும் வெற்றியைப் பதிவுசெய்த இரண்டாவது அணி எனும் சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது.

Advertisement
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய வங்கதேசம்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய வங்கதேசம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 04, 2024 • 10:35 AM

பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது 262 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 172 ரன்களை மட்டுமே எடுத்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 04, 2024 • 10:35 AM

பின்னர் 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியானது 56 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் வங்கதேச அணியானது மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. 

Trending

மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த லிட்டன் தாஸ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர். இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வங்கதேச அணியானது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளது. 

அதன்படி, இப்போடில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 21 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இருப்பினும் அந்த அணி சரிவிலிருந்து மீண்டதுடன் இப்போட்டியில் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் மிகக்குறைந்த ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பிறகும் வெற்றியைப் பதிவுசெய்த இரண்டாவது அணி எனும் சாதனையை படைத்துள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

இதற்கு முன்னதாக கடந்த 1887ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியானது முதல் 6 பேட்ஸ்மேன்களை 17 ரன்களுக்கு இழந்த நிலையிலும், அதிலிருந்து மீண்டு வெற்றியைப் பதிவுசெய்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்துவருகிறது. இந்நிலையில் தான் இந்த பட்டியலில் வங்கதேச அணியானது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement