
வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது ஏற்கனவே அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றிய வேளையில் நேற்றுடன் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணத்தில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 அவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.
பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 100 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக 88 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது. நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரில் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரின் 4 போட்டிகளில் அவர்கள் தோல்வியை சந்தித்தது அந்த அணியின் பலவீனத்தை பெரிதாக வெளிகாட்டியுள்ளது.
அதேவேளையில் டி20 உலக கோப்பை தொடர் நெருங்கி வரும் வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்படி சொதப்பி வருவது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான்,