
The Best Number To Bat For Me Personally, It's Obviously Three: Shreyas Iyer (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவந்த இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது.
இத்தொடரில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்தடுத்து மூன்று போட்டிகளிலும் ஆட்டமிழந்து அரைசதம் கடந்து அசத்தினார். அதிலும் இத்தொடரில் அவரது ஸ்டிரைக் ரேட் 174 ஆகும். இதன் காரணமாக அவர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், “வெளிப்படையாகவே, எனக்கு இந்த மூன்று அரைசதங்களும் சிறப்பானவை. நேற்று, தொடரை வென்றது, கடைசி அரைசதம் சிறப்பானது. உண்மையைச் சொல்வதென்றால், ஃபார்மில் வர உங்களுக்கு ஒரு பந்து மட்டுமே தேவை. இந்தத் தொடரில் எனக்கு வாய்ப்புகள் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.