Advertisement

தி ஹண்ட்ரெட்: மாத்யூ வேட் அதிரடி; த்ரில் வெற்றிபெற்றது பர்மிங்ஹாம் பினீக்ஸ்!

லண்டன் ஸ்பிரிட் அணிக்கெதிரான ஹண்ட்ரெட் லீக் ஆட்டத்தில் பர்மிங்ஹாம் பினீக்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
The Hundred 2022: Matthew Wade's 81 sets up Phoenix's one-wicket win
The Hundred 2022: Matthew Wade's 81 sets up Phoenix's one-wicket win (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 31, 2022 • 11:31 AM

இங்கிலாந்தில் நடைபெற்றும் தி ஹண்ட்ரெட் ஆடவர் கிரிக்கெட் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் - பர்மிங்ஹாம் பினீக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 31, 2022 • 11:31 AM

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் ஸ்பிரிட் அணியில் ரோஸிங்டன் 6 ரன்களோடும் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஸாக் கிரௌலி 20 ரன்களோடு, பென் மெக்டர்மோட் 36 ரன்களோடும் வெளியேறினர். 

Trending

பின்னர் கேப்டன் மோர்கன் 8 ரன்களிலும், லாரன்ஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க, இறுதியில் ரவி போபாரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரிகள் என 45 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 100 பந்துகள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பர்மிங்ஹாம் பினீக்ஸ் அணியில் வில் ஸ்மீத் ஒரு ரன்னிலும், சொலமன் புடிங்கர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் களமிறங்கிய மேத்யூ வேட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைக் கடக்க, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற 81 ரன்களில் மேத்யூ வேட்டும் விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தில் இலக்கை எட்டியது பர்மிங்ஹாம் பினீக்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement