
The Hundred 2022: Moeen Ali, Liam Livingstone power Birmingham Phoenix to comfortable win (Image Source: Google)
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் - டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், கொஹ்லர், முன்ரோ, காக்பின் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கிரெகோரி - டேனியல் சாம்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேனியல் சாம்ஸ் 55 ரன்களையும், கிரெகோரி 35 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 100 பந்துகள் முடிவில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்தது.