
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் - சதர்ன் பிரேவ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் - பிலீப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 22 பந்துகளில் 38 ரன்களைச் சேர்த்த பிலீப் சால்ட் ஆட்டமிழந்து வெளியேற, அதன்பின் களமிறங்கிய மேட்சனும் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் - ஆண்ட்ரே ரஸ்ஸல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அரைசதமும் கடந்து அசத்தினர். இதில் பட்லர் 68 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை விக்கெட் இழக்காமல் 64 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 100 பந்துகள் முடிவில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது.