
தி ஹண்ட்ரட் என்றழைக்கப்படும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஆடவர் நடப்பாண்டு சீசனில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் - சதர்ன் பிரேவ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், கோஹ்லர் காட்மோர், காலின் முன்ரோ ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் களமிறங்கிய சாம் ஹைன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், அரைசதம் கடந்தும் அசத்தினார்.
பின் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 63 ரன்களைச் சேர்த்த நிலையில் சாம் ஹைனும் விக்கெட்டை இழக்க, 100 பந்துகள் முடிவில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களைச் சேர்த்தது. சதர்ன் பிரேவ் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.