
THE HUNDRED Men: Moeen Ali helps Birmingham pip London Spirit (Image Source: Google)
தி ஹண்ரட் ஆடவருக்கான தொடரில் நெற்று பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணி, லண்டன் ஸ்பிரிட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பர்மிங்ஹாம் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
அதன்படி களமிறங்கிய லண்டன் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிரௌலி அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 64 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களைச் சேர்த்தது. பர்மிங்ஹாம் அணி தரப்பில் மில்னே, டாம் ஹெல்ம், ஹோவல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.