இம்பேக்ட் பிளேயர் விதி; ஐபிஎல் அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ!
இந்திய வீரர்களின் முக்கியத்துவம் பாதிக்க கூடாது என்பதற்காக இம்பேக்ட் விதியில் இந்திய வீரர்களை தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை பிசிசிஐ மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு பல ஆண்டுகள் கழித்து, அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் போட்டி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் சென்னை அணியும், மும்பை அணியும் இழந்த பெருமையை மீட்கும் உத்வேகத்துடன் இந்த தொடரில் களமிறங்க உள்ளது.
இந்த தொடருக்கான மினி ஏலம் வரும் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இதற்காக 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், வரும் ஐபிஎல் தொடர் மூலம் இம்பேக்ட் பிளேயர்ஸ் என்ற புதிய விதிமுறை அமல்படுத்த போவதாக பிசிசிஐ அன்மையில் அறிவித்தது. அதன்படி ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஏதேனும் ஒரு வீரருக்கு பதிலாக வேறு வீரரை 2ஆவது இன்னிங்சில் மாற்றிக் கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, பும்ரா போன்ற பந்துவீச்சாளர், பேட்டிங்கில் எந்த தாக்கத்தையும் ஏறபடுத்த மாட்டார். இதனால், அவர் பந்துவீசி முடித்தவுடன் அவருக்கு பதில் வேறு ஏதேனும் பேட்ஸ்மேனை களமிறக்கலாம்.
Trending
இந்த விதி பிக் பேஷ் போன்ற தொடரில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது கிரிக்கெட்டின் தன்மையையே மாற்றுவது என்பதால், இந்த விதியை சோதனை முயற்சியாக நடப்பாண்டில் சையது முஸ்தாக் அலி டி20 தொடரில் பிசிசிஐ பயன்படுத்தியது. இது வீரர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து வரும் ஐபிஎல் தொடரிலும், இந்த விதிமுறை பயன்படுத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது.
இதனால், அணி நிர்வாகிகள் பல வெளிநாட்டு வீரர்களை இம்பேக்ட் பிளேயிராக பயன்படுத்தி கொள்ளலாம் என்று திட்டங்களை வகுத்தனர். ஏற்கனவே 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் தான் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் என்ற விதியை மாற்றுங்கள் என்று ஐபிஎல் அணிகள் கோரிக்கை விடுத்தது. இதனால் இந்த விதியை பயன்படுத்தி வெளிநாட்டு வீரர்களை 5ஆவது வீரராக பயன்படுத்தலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தான் பிசிசிஐ ஒரு மெகா டிவிஸ்ட் வைத்துள்ளது. இந்திய வீரர்களின் முக்கியத்துவம் பாதிக்க கூடாது என்பதற்காக இம்பேக்ட் விதியில் இந்திய வீரர்களை தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை பிசிசிஐ மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிளேயிங் லெவனில் எந்த வீரரை மாற்ற வேண்டும் என்றாலும், இந்திய வீரரை தான் இம்பேக்ட் வீரராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.
இதன் மூலம் இந்திய அணி வீரர்களின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும். மேலும் இம்பேக்ட் வீரர் என்ற விதியில் ஆல்ரவுண்டர்களின் மவுசு ஏலத்தில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், பேட்ஸ்மேனுக்கு பதிலாக வேறு ஒரு பவுலரை பயன்படுத்தலாம் என்பதால், போட்டியின் சுவாரஸ்யமும் குறையும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now