CT2025: டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அறிவிப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் எட்டு அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து இத்தொடரை எதிர்கொள்கின்றனர்.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Trending
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான இந்த தென் ஆப்பிரிக்க அணியில் கயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் அன்ட்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் ஆன்ட்ரிச் நோட்ர்ஜே கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காயத்தை சந்தித்தார்.
இதனால் அந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலக்கோப்பை தொடரை தவறவிட்ட அவர், அதன்பின் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் கிட்டத்திட்ட் 15 மாதங்களுக்கு பிறகு அவர் மீண்டும் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணிக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அதேபோல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் காயத்தை சந்தித்த லுங்கி இங்கிடியும் தற்போது மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.
இதுதவிர்த்து டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸட்ப்ஸ், வியான் முல்டர் மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேற்கொண்டு டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், மார்கோ ஜான்சென், காகிசோ ரபாடா ஆகியோரும் தங்களது இடத்தை உறுதிசெய்துள்ளனர். அதேசமயம் ரீஸா ஹென்றிக்ஸ், ஜெரால்ட் கோட்ஸி, இளம் வீரர் குவேனா மபாகா உள்ளிட்டோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராஸ்ஸி வான்டெர் டுசென்.
Also Read: Funding To Save Test Cricket
தென் ஆப்பிரிக்கா போட்டி அட்டவணை
- பிப்ரவரி 21 - தென் ஆப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான், கராச்சி
- பிப்ரவரி 25 - தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, ராவல்பிண்டி
- மார்ச் 01 - தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து, கராச்சி
Win Big, Make Your Cricket Tales Now