-mdl.jpg)
The role that I play, I always need the backing of captain and coach: Dinesh Karthik (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா 64 (44), சூர்யகுமார் யாதவ் 24 (16) ஆகியோர் நல்ல துவக்கம் தந்த நிலையில் அடுத்து ஷ்ரேயஸ் ஐயர் 0 (4), ரிஷப் பந்த் 14 (12), ஹார்திக் பாண்டியா 1 (3) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர்.
இதனால் இந்திய அணி 16 ஓவர்களில் 138/6 ரன்களை மட்டும் சேர்த்திருந்த நிலையில், இறுதிக் கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அபாரமாக விளையாடி 19 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 41 ரன்களை குவித்து அசத்தினார். இதனால், இந்தியா 20 ஓவர்களில் 190/6 ரன்களை குவித்து அசத்தியது.