
'The Ship Needs Its Captain': Big Update On MS Dhoni's CSK's Future (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் 14ஆவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் 15ஆவது ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் பங்கேற்கின்றன. இதனால் மிகப்பெரிய அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக கேப்டன் தோனி தக்க வைக்கப்பட்டுள்ளார். இதை சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்று தெரிவித்தது.