
The skipper Perera guides Sri Lanka to a competitive score (Image Source: Google)
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் பெரேரா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர்கள் குசால் பெரேரா - குணத்திலக இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது. இதனால் முதல் 10 ஓவர்களிலேயே இலங்கை அணி 77 ரன்களை குவிந்திருந்தது.
இதையடுத்து 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குணத்திலக ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குசால் பெரேரா அரை சதம் கடந்தார். பின்னர் களமிறங்கிய நிஷன்கா ரன் ஏதுமின்றியும், குசால் மெண்டிஸ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.