
The Tamil Nadu Premier League 2022 (TNPL) cricket tournament starts on June 23 (Image Source: Google)
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரீமியர் லீக்) டி20 கிரிக்கெட் தொடர் 2016ஆம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. அவ்வகையில் 6ஆவது டிஎன்பிஎல் தொடர் வரும் ஜூன் இறுதி முதல் ஜூலை இறுதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில் 6ஆவது டிஎன்பிஎல் தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொடரின் முதல் போட்டி ஜூன் 23ஆம் தேதி தொடங்குகிறது. நெல்லை, நத்தம், கோவை, சேலம் ஆகிய மைதானங்களில் போட்டி நடைபெறும்.
மொத்தம் 28 லீக் ஆட்டங்கள், பிளேஆப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கின்றன. பிளேஆப் போட்டிகள் சேலம் மற்றும் கோவையில் நடக்கின்றன. ஜூலை 30ஆம் தேதி கோவையில் இறுதிப்போட்டி நடத்தப்படுகிறது.