தாஜ்மஹாலில் காட்சிப்படுத்தப்பட்ட உலகக்கோப்பை!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஜ்மஹாலின் முன் உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதிவரை ஐசிசியின் 13ஆவது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் 10 நகரங்களில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
ஆமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் சந்திக்கிறது.
Trending
இதனையொட்டி உலகக்கோப்பை சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது, அதன்படி உலகக்கோப்பை சுற்றுப்பயணத்தில் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மக்கள் பார்வைக்கு கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து உலகக்கோப்பை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது, அதன்படி இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலமான தாஜ்மகால் வளாகத்தில் தற்போது உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் ஆவலுடன் கண்டு ரசித்துவருகின்றன.
Win Big, Make Your Cricket Tales Now