Advertisement

அடுத்த போட்டியில் ஸ்ரேயாஸ் விளையாடுவாரா? - விவிஎஸ் பதில்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான் என விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 27, 2021 • 11:53 AM
‘There is an unwritten rule in this Indian team’: Laxman on Iyer's place in 2nd Test Playing XI vs N
‘There is an unwritten rule in this Indian team’: Laxman on Iyer's place in 2nd Test Playing XI vs N (Image Source: Google)
Advertisement

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 345 ரன்களை குவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மூன்றாம் நாளில் நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. 

இந்தப் போட்டியில் அறிமுக வாய்ப்பைப் பெற்ற இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார்.

Trending


மேலும் இந்திய அணிக்காக அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 16ஆவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்நிலையில் அடுத்த போட்டியில் கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்புவதால் ஸ்ரேயாஸ் ஐயர்அடுத்த போட்டியில் விளையாடுவாரா ? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன் கூறுகையில் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். 

இதுகுறித்து பேசிய அவர், “விராட்கோலி அணிக்கு திரும்பும் பட்சத்தில் நிச்சயம் ஸ்ரேயாஸ் ஐயர் தனது இடத்தை இழப்பார் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஏனெனில் ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 2016 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது ரஹானேவிற்கு பதிலாக களமிறங்கிய கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தி இருந்தார். 

ஆனால் அடுத்த போட்டியில் ரஹானே விளையாட வந்துவிட்டதால் கருண் நாயர் வேறு வழியின்றி வெளியேற்றப்பட்டார். அதேபோன்று இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கோலி வருவதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் தனது இடத்தை விட்டு கொடுத்தாக வேண்டும்.

என்னைப்பொறுத்தவரை அவர் அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை. இந்திய அணியில் இது எழுதப்படாத ஒரு விதியாக இருந்து வருகிறது. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஹானே மோசமான ஃபார்மில் இருப்பதால் அவரது இடத்திற்கு ஆபத்து இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement