
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
இருந்தபோதும், இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்தை விளையாட வைக்காமல் தினேஷ் கார்த்திக்கிர்க்கு முன்னுரிமை கொடுத்து விளையாட வைத்துள்ளது, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் மிக சரியாக பயன்படுத்தி விளையாடி வருவதால் ரிஷப் ஓரம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூழலுக்கு ஏற்றவாறு அணியை தேர்வு செய்து விளையாட வைக்கிறோம் ரிஷப் பண்ட்டை கழட்டிவிடவில்லை என்று தெரிவித்திருந்தார்.