
இந்திய அணி சொந்த நாட்டில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை எதிர்கொள்ள, தற்பொழுது எந்த மாதிரியான அணியை அமைப்பத? என்று தடுமாறிக் கொண்டு இருக்கிறது. எந்த ஒரு வலிமையான அணிக்கும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர், பேட்டிங் யூனிட்டில் இடது கை பேட்ஸ்மேன் குறைந்தது இருவராவது இருப்பது, ஒரு நல்ல ஆல்ரவுண்டர் இருப்பது மிக மிக முக்கியமானது.
இந்த அம்சங்களை எல்லாம் கொண்டிருக்கின்ற அணிதான் பெரிய தொடர்களில் கோப்பையை வெல்லும் அணியாக இருக்கும். கலவையான திறமைகள் அனைத்தையும் உள்ளடக்கி இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு வித்தியாசமான கோணத்தை உருவாக்கி நெருக்கடி தருவார்கள். அதேபோல் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கை பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவது சிரமமான காரியம்.
வலது இடது என்று பேட்ஸ்மேன்களுக்கு மாற்றி மாற்றி வீசுவதால் அவர்களின் லைன் அண்ட் லென்த் உடையும். இதனால் ரன்கள் கொண்டு வருவதற்கு எளிதாக இருக்கும். தற்போதைய இந்திய அணியை எடுத்துப் பார்த்தால் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அணிக்குள் வருவார்கள் என்றால், இந்திய பேட்டிங் யூனிட்டில் ரவீந்திர ஜடேஜா தவிர வேறு யாரும் இடது கை பேட்ஸ்மேன் இருக்க மாட்டார்கள்.