Advertisement

SA vs AUS, 3rd T20I: சிக்சர் மழை பொழிந்த ஃபெரீரா; ஆஸ்திரேலியாவுக்கு 191 டார்கெட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 03, 2023 • 19:05 PM
SA vs AUS, 3rd T20I: சிக்சர் மழை பொழிந்த ஃபெரீரா; ஆஸ்திரேலியாவுக்கு 191 டார்கெட்!
SA vs AUS, 3rd T20I: சிக்சர் மழை பொழிந்த ஃபெரீரா; ஆஸ்திரேலியாவுக்கு 191 டார்கெட்! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று டர்பனில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - டெம்பா பவுமா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய மேத்யூ ப்ரீட்ஸ்கி 5 ரன்களிலும் என அடுத்தடுத்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியனுக்கு திரும்பினர். 

Trending


அதன்பின் ஹென்றிக்ஸுடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய மார்க்ரம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரீஸா ஹென்றிக்ஸும் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதையடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 ரன்களிலும், பிஜொர்ன் ரன்கள் ஏதுமின்றியும், ஜெரால்ட் கோட்ஸி 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் இப்போட்டியில் 6ஆவது வரிசையில் களமிறங்கிய டொனாவன் ஃபெரீரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 48 ரன்களில் ஆட்டமிழந்து தனது அரைசதத்தை தவறவிட்டார்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சீன் அபேட் 4 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement