
'These quicks are dominating': Kohli on Ishant and Siraj (Image Source: Google)
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் இரு இடத்தில் இருக்கும் அணிகளான நியூசிலாந்து - இந்தியா வரும் வெள்ளிகிழமை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இங்கிலாந்தின், சவுத்தாம்படன் நகரில் இருக்கும் ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இந்த இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
இதற்காக இந்திய அணி இரு அணிகளாக பிரிந்து தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் இப்போட்டியில் களம் காணவுள்ளது.
இதில் இந்திய அணி இரு அணிகளாக பிரிந்து தங்களுக்குள் 3 நாள் பயிற்சி ஆட்டத்தை விளையாடியது. அதில் சுப்மன் கில், ரிஷப் பன், ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் என பலரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.