
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கவே முடியாத அளவிற்கு தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கிளன் மேக்ஸ்வெல்லிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. மும்பை வான்கடேவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – ஆஃப்கானிஸ்தான் இடையேயான டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜார்டன் 129 ரன்களும், ரசீத் கான் 35 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 91 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்ததால், இந்த வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு சாத்தியமே இல்லை என்றே கருத்தப்பட்ட. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், 9வது விக்கெட்டிற்கு களமிறங்கிய கம்மின்ஸுடன் கூட்டணி சேர்ந்து உலகத்தரம் வாய்ந்த பேட்டிங்கை வெளிப்படுத்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக மிக சிறந்த ஒரு இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.
சரியாக நடக்கவோ, கால்களை அசைக்கவோ, ஓடாவோ முடியாத நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்காக அதீத நம்பிக்கையுடன் போராடிய கிளன் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 10 சிக்ஸர் மற்றும் 21 பவுண்டரிகளுடன் 201 ரன்களும் எடுத்து வரலாறு படைத்ததோடு ஆஸ்திரேலிய அணிக்கு 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்று கொடுத்தார்.