Advertisement

ஷமியை நீக்கி பாண்டியாவை சேர்க்க வேண்டாம் - வாசிம் அக்ரம் எச்சரிக்கை!

நாக் அவுட் போட்டிகள் காத்திருப்பதால் முழுமையாக 100% பாண்டியா குணமடையாமல் ரிஸ்க் எடுத்து அணிக்குள் கொண்டு வர வேண்டாம் என்று வாசிம் அக்ரம் எச்சரித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 24, 2023 • 20:09 PM
ஷமியை நீக்கி பாண்டியாவை சேர்க்க வேண்டாம் - வாசிம் அக்ரம் எச்சரிக்கை!
ஷமியை நீக்கி பாண்டியாவை சேர்க்க வேண்டாம் - வாசிம் அக்ரம் எச்சரிக்கை! (Image Source: Google)
Advertisement

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மிகவும் சுவாரசியமான தொடராக மாற்றி இருக்கின்றன. அதிரடியான பேட்டி அணுகுமுறை கொண்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, பேட்டிங் செய்ய சாதகமான சிறிய மைதானமான டெல்லியில் வைத்து ஆஃப்கானிஸ்தான் அணி வென்றதிலிருந்து, உலகக் கோப்பைத் தொடர் சூடுப்பிடிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக அனைத்து அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்புகள் திறக்கப்பட்டது.

இதற்கு அடுத்த நாளே நெதர்லாந்து இந்த தொடரில் பலம் வாய்ந்த அணியாக விளங்கும் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்த, புள்ளி பட்டியலில் பல மாற்றங்கள் உருவாகின. இது இன்னும் உலகக்கோப்பை தொடரை சுவாரஸ்யமாக்கியது. இந்த நிலையில் நேற்று ஆஃப்கானிஸ்தான் அணி மீண்டும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்றி இருக்கிறது. தற்பொழுது ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து இந்த இரண்டு அணிகள்தான் உலகக் கோப்பை தொடருக்கு எதிர்பார்ப்பை ஏற்றிய அணிகளாக மாறியிருக்கின்றன.

Trending


தற்பொழுது நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் கடைசி பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய அணி அடுத்த போட்டியில் லக்னோ மைதானத்தில் இங்கிலாந்து அணி எதிர்த்து விளையாடவுள்ளது. அதிலும் 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து கோப்பையை வெல்லும் பயணத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா குணமடைந்து வந்தால் முகமது ஷமி நீக்கப்படுவதற்கான சூழல் காணப்படுகிறது. இருப்பினும் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்தாலும் வலுவான நியூசிலாந்தை தோற்கடிப்பதற்கு 5 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய ஷமி உலகத்தரம் வாய்ந்த பவுலர் என்பதால் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கம்பீர், ரெய்னா போன்ற சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் நாக் அவுட் போட்டிகள் காத்திருப்பதால் முழுமையாக 100% பாண்டியா குணமடையாமல் ரிஸ்க் எடுத்து அணிக்குள் கொண்டு வர வேண்டாம் என்று வாசிம் அக்ரம் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தற்போதைய அணி ஹர்திக் பாண்டியா இல்லாமலேயே வலுவாக காணப்படுகிறது. ஒருவேளை அவர் ஃபிட்டானால் நல்லது. ஆனால் ஷமியை நீக்குவது மிகவும் கடினமான முடிவாக இருக்கும். இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாண்டியா விஷயத்தில் இந்தியா ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று நான் கருதுகிறேன். ஏனெனில் தசைப்பிடிப்பு காயத்தை பொறுத்த வரை ஆரம்பத்தில் நீங்கள் நன்றாக உணர்ந்தாலும் போட்டியின் போது மீண்டும் காயத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. 

எனவே அவரை 100% ஃபிட்டான பின் விளையாட வையுங்கள். அத்துடன் எந்த வீரர் அணிக்குள் வந்தாலும் சிறப்பாக செயல்படும் அளவுக்கு தயாராக வைத்திருப்பதற்கான பாராட்டுக்கள் இந்திய அணி நிர்வாகத்திற்கு சேர வேண்டும். ஷமி வீசிய பந்து தரையில் பட்டதும்  அது ஸ்விங்காகி சென்றது. அதனாலேயே அவர் அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement