
“This team Is No Longer About The 3 Stars” – Aakash Chopra on RCB Winning (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2ஆவது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. ரஜத் படிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனைத்தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.