
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் அணி வீரர்களும் பெங்களூருவில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற கையுடனும், நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிரான படுதோல்வியுடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் இந்த தொடரில் எந்த அணி ஆதிக்கம் செலுத்து தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் இடம்பிடித்துள்ள இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா, பெங்களூருவில் நடைபெறவுள்ள முதல் போட்டி குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “குடும்ப இணைப்பு காரணமாக இந்த சோதனை எனக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் நான் வெலிங்டனில் பிறந்து வளர்ந்தவன். அப்படி பார்க்கையில் நான் எல்லா வழிகளிலும் ஒரு நியூசிலாந்து நாட்டவர் தான்.