
நியூசிலாந்து, ஆஸ்திரேலிய உள்ளிட்ட அணிகள் உலகக்கோப்பைக்கான உத்தேச அணியையே தேர்வு செய்துவிட்ட நிலையில், இந்திய அணியோ புதிய வீரர்களுக்கு வாய்ப்பு சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு முன் யாரும் எதிர்பார்க்காத வகையில் சைமண்ட்ஸ் அணியில் இருக்க வேண்டும் என்று விடாபிடியாக கேப்டன் ரிக்கி பாண்டிங் இருந்தார். அந்த உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு சைமண்ட்ஸ் மிகமுக்கிய காரணம்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக சைமண்ட்ஸ் அடித்த சதம், கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும். இப்படி உலகக்கோப்பைத் தொடருக்கென பல்வேறு அணிகளும் சர்ப்ரைஸ் வீரர்களை அணிக்குள் கொண்டு வரும். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் தொடரின் போது இங்கிலாந்து அணி ஆர்ச்சரையும், இந்திய அணி விஜய் சங்கர் மற்றும் ரிஷப் பந்த் இருவரையும் அணிக்குள் கொண்டு வந்தது.
அது சில நேரங்களில் பலனளிக்கும், பல நேரங்களில் இந்திய அணி காலை வாரிவிடும். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வரும் திலக் வர்மாவை உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.