Advertisement

திலக் வர்மா நிச்சயம் அணியில் இருக்க வேண்டும் - ஸ்ரீகாந்த் கருத்து டாம் மூடி பதிலடி!

சர்வதேச அரங்கில் அதை வெளிப்படுத்துவதற்கு திலக் வர்மாவுக்கு ஏராளமான முக்கிய விஷயங்கள் இருப்பதாக நான் பார்க்கிறேன் என முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

Advertisement
திலக் வர்மா நிச்சயம் அணியில் இருக்க வேண்டும் - ஸ்ரீகாந்த் கருத்து டாம் மூடி பதிலடி!
திலக் வர்மா நிச்சயம் அணியில் இருக்க வேண்டும் - ஸ்ரீகாந்த் கருத்து டாம் மூடி பதிலடி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 25, 2023 • 01:37 PM

இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு சில நாட்களுக்கு முன்பு ஆசியக் கோப்பை ஒருநாள் தொடருக்கு 17 பேர் கொண்ட இந்திய அணியை வெளியிட்டது. இந்த அணியில் 20 வயதான, உள்நாட்டு கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வரும் இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 25, 2023 • 01:37 PM

இளம் பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர் ஆட்டத்தை நகர்த்திச் செல்வதில் காட்டும் பொறுப்பு மற்றும் அவருடைய மனதிடம் ஆகியவை பல முன்னாள் வீரர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் ஆசிய கோப்பை இந்திய அணியில் அவர் இடம்பெற வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார்கள்.

Trending

இப்படியான நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் திலக் வர்மாவை இப்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணி வரை கொண்டு செல்லக்கூடாது. அவரை அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பைக்கு கொண்டு சென்று அதற்கு மேல்தான் பெரிய தொடர்களுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார்.

தற்பொழுது திலக் வர்மா பற்றி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி பேசுகையில் “ஒரு பயிற்சியாளரின் கண்ணோட்டத்தில் நான் கவனிக்கும் ஒரு விஷயம் இருக்கிறது. அது ஒரு வீரரின் குணாதிசயம். பல வீரர்கள் கையில் மட்டை உடன் திறமையோடு இருக்கிறார்கள். ஆனால் விளையாட்டு நேரம் என்று வரும்பொழுது நாம் அவர்களிடம் அவர்களுடைய சுபாவத்தை மட்டும்தான் பார்க்க வேண்டும்.

கடந்த 12 மாதங்களாக ஐபிஎல் தொடர் மற்றும் அவரது சுற்றுப் பயணங்களை பார்த்த பொழுது, அவர் நல்ல மனதிடத்தையும் அமைதியையும் வெளிப்படுத்தக் கூடியவராக இருக்கிறார். உள்நாட்டு வீரராக இருந்து வந்த அவரை இதுவே சர்வதேச வீரராக மாற்றுகிறது. நிறைய வீரர்கள் இதை தவற விடுகிறார்கள். ஒரு உள்நாட்டு வீரர் சர்வதேச மட்டத்தில் அறிமுகம் ஆகும் பொழுது மற்ற அவரது திறமைகள் எல்லாம் குறைவாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 

அவருடைய மனதிடம் மற்றும் குணாதிசயம்தான்முக்கியமாக பார்க்கப்படும். சர்வதேச அரங்கில் அதை வெளிப்படுத்துவதற்கு திலக் வர்மாவுக்கு ஏராளமான முக்கிய விஷயங்கள் இருப்பதாக நான் பார்க்கிறேன். அவர் பிரகாசிக்கும் அளவுக்கு வெளிச்சம் கொண்டவராக இருக்கிறார். அதனால்தான் அவர் அணியிலும் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement