
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளட்து. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது. அதிலும் குறிப்பாக இளம் வீரர் திலக் வர்மாவின் மீதான எதிர்பார்ப்பும் இப்போட்டியில் அதிகரித்துள்ளது.
ஏனெனில் கடந்த சீசனிலேயே மும்பை அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும், நடப்பு சீசனில் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார் திலக் வர்மா. ஐபிஎல் தொடரை மும்பை அணி மோசமாக தொடங்கிய போதும், திலக் வர்மா தனியாளாக நின்று போராடினார். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், ஃபினிஷர் என்று எந்த ரோலில் களமிறங்கினாலும் வெளுத்து வாங்கினார். நடப்பு சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 300 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.
இதனால் திலக் வர்மா விரைவில் இந்திய அணிக்காக அறிமுகமாவார் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களும், இந்திய அணியின் கேப்டனுமான ரோகித் சர்மாவும் கூறியுள்ளார். ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த திலக் வர்மா, சிறு வயது முதலே சுரேஷ் ரெய்னாவை போல் விளையாட வேண்டும் என்று கனவு கண்டுள்ளார்.