
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 226 ரன்களைக் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
டி20 தொடர் முடிவடைந்த பின் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.