
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 தொடரில் நடைபெறுகிறது. இதில் முதல் டி20 போட்டி வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது. 2ஆவது டி20 போட்டி வரும் 23ஆம் தேதியும், 25ஆம் தேதி கடைசி டி20 போட்டியும் நடைபெறுகிறது. இந்த தொடரில் டேவிட் வார்னருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மிட்செல் ஸ்டார்க், ஸ்டோனிஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணி பலம் குன்றியதாக கருதப்பட்டது. எனினும் பாட் கம்மின்ஸ், ஹசல்வுட், ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா போன்ற பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதே போன்று ஜாஸ் இங்லீஷ், மேக்ஸ்வெல், ஸ்மித், மேத்தீவ் வெட் போன்ற வீரர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி அறிமுக வீரர் ஒருவரையும் இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறக்க உள்ளது. ஆம், அது வேறு யாரும் இல்லை. சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட் தான். இவர், முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட உள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், டிம் டேவிட் பயிற்சி செய்யும் காணொளியை வெளியிட்டுள்ளது.